ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது!
16 வயது சிறுமியை ராமநாதபுரத்தில் ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்ததால், அவளது பெற்றோர் புதனன்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கொட்டகை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பழனிசெல்வம், மதன், சதீஷ்குமார், பிரதாப், பாலமுருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 28-ஆம் தேதி பரத்தின் ஆட்டோவில் சிறுமியை கடத்திச் சென்று, பாப்பாக்குடி என்ற இடத்தில் வைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.