NLC பேச்சுவார்த்தை: அழைப்பின்றி திடீரென வருகை தந்த அன்புமணி.! தலைமைச் செயலகத்தில் பரபரப்பு…

AnbumaniRamadoss

என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், அழைப்பே இல்லாமல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வந்ததால் பரபரப்பு.

சென்னை: NLC-யை சுற்றி நிலம் கையகப் படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்தில், அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு சிலருக்கும் முறையாக அழைப்பு வரவில்லை புகார் அளித்துள்ள நிலையில், விவசாயிகளின் ஆதரவோடு அழைப்பில்லாமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தலைமை செயலகத்திற்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது, கூட்டம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக, என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்