4 நாளில் ரூ.200 கோடி வசூல்.! பொன்னியின் செல்வனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு…
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இப்படத்தின் விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், படம் வெளியாக்க 4 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.
இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Chola legacy grows!#PS2 conquers the world with 200+ crores!
Book your tickets now!
???? https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3#PS2RunningSuccessfully #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial… pic.twitter.com/w94Gl5c08z— Lyca Productions (@LycaProductions) May 2, 2023
இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடியை கடந்த நிலையில், விரைவில் இரண்டாம் பாகமும் ரூ.500 கோடியை கடக்கும் என படக்குழு கணித்துள்ளது.