இறுதி கட்ட விசாரணையின் தீர்ப்பு என்ன.? ராகுல்காந்தி வழக்கின் பின்னணி.!

Rahulgandhi

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற ராகுல்காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது. 

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி பேசுகையில், மோடி எனும் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அவர் மீது குஜராத்தில் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி என்பவர் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் வகித்து வந்த கேரள, வயநாடு நடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து சூரத் நீதிமன்றத்திலேயே 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்ககோரி மேல்முறையீடு செய்து இருந்தார். ஆனால், சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து தான் வசித்து வந்த அரசு பங்களாவை ராகுல்காந்தி அண்மையில் காலி செய்தார்.

இதற்கிடையில், குஜராத் மாநில பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி, சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து இருந்தார் இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடைபெற்று, மே 2 (இன்று) இறுதி விசாரணை நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.இன்றே தீர்ப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகுறது.

ராகுல்காந்தி மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர் என்பதால் இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய வழக்காக பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்