வெடித்து சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்.! அமெரிக்க விண்வெளி துறை மீது பாய்ந்த வழக்கு.! 

SPACE X STARSHIP

ஸ்பேஸ்-எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய காரணத்தால் அமெரிக்க விண்வெளி துறையான US FAA மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்-X நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது இரண்டாவது கட்ட சோதனையின் போது ராக்கெட் வெடித்து சிதறியது. இது குறித்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விஞ்ஞானிகள் கூறுகையில், எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை எனவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அடுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ராக்கெட் வெடித்து சிதறிய இந்த நிகழ்வை குறிப்பிட்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான FAA (US Federal Aviation Administration) மீது வழக்கு தொடரபட்டு உள்ளன. அமெரிக்க வனவிலங்கு மற்றும் சுற்றுசூழல் குழுக்கள் தான் இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்துள்ள்ளது.

வனவிலங்குகள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு வெடித்து சிதறியதன் காரணமாக வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அதன் காரணமாக ஸ்பேஸ்எக்ஸுக்கு FAA வழங்கிய ஐந்தாண்டு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்