ஆடியோ விவகாரம் : மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை.! முதல்வர் ‘பளீச்’ பதில்.!

MK Stalin

பிடிஆர் ஆடியோ குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் கூறி விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை என கூறினார். 

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பொதுமக்களின் கேள்விகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அதற்கு உங்களில் ஒருவன் எனும் நிகழ்வின் மூலம் காணொளி வாயிலாக பதில் கூறுவது வழக்கம். அப்படி இன்றும் உங்களில் ஒருவன் வீடியோ வெளியாகி இருந்தது.

அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது பற்றிய கேள்விக்கு , முதல்வர், இதுகுறித்து 2 முறை தண்னிடம் நிதியமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். எங்களுக்கு மக்கள் பணிகள் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இந்த நேரத்தில் மட்டமாக அரசியல் செய்யும் நபர்களுக்கு பதில் கூறி அவர்களை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என தனது பதிலை கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த ஆடியோ குறித்து  தனது விளக்கத்தையும் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். மேலும், 2 முறை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்