கர்நாடகாவில் ஊழலை தடுக்க பாஜக அரசு என்ன செய்தது; ராகுல்காந்தி பேச்சு.!

RahulGandhi Camp

பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி கடுமையாக சாடினார். கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய  ராகுல் கூறியதாவது, பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று கூறினார்.

இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடகா மற்றும் அதன் மக்களுக்கானது. இதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், காங்கிரஸ் தன்னை 91 முறைஅவமதித்ததாக பிரதமர்கூறினார், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்றும் ராகுல்தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் ஊழல் மற்றும் 40% கமிஷனையும் தடுக்க என்ன செய்தீர்கள் என்றும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்