அடி தூள்…வந்தது “AK62” அப்டேட்…தலைப்பு இது தான்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

VidaaMuyarchi

நடிகர் அஜித்குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவர் நடிக்க உள்ள அவரது  62-வது திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படத்தின் தலைப்புடன் இயக்குனர் யார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் 62வது திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.  விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாள் ஒட்டி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்தநாளுடன் சேர்த்து அப்டேட்டையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்