புதிதாக பூ கண்டுபிடிப்பு !அதற்கு முன்னாள் முதல்வரின் பெயர் வைத்த விஞ்ஞானி..!
அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் தவாங் மாவட்டத்தில் உள்ள சிமிதாங் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மலர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை நிற அடிப்பகுதியையும், இளம் ஊதா நிற மேல் பகுதியையும் கொண்ட இந்த மலர் பல்சாமினசியே குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்நிலையில், இந்த மலருக்கு அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீமா காண்டுவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான தோர்ச்யீ காண்டுவின் பெயரை வைத்து விஞ்ஞானிகள் பெருமை படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று முதல்வர் அலுவலகம் சென்ற விஞ்ஞானிகள் மலரின் புகைப்படத்தை முதல்வருக்கு பரிசாக அளித்தனர். மேலும், பெயர் வைக்கப்பட்டது குறித்தும் தெரிவித்தனர்