ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 58 ஆண்டு கால வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆடவர் ஜோடி.!
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், சாத்விக்சாய்ராஜ்-சிராக் இந்திய ஆடவர் ஜோடி முதன்முறையாக வென்று சாதனை.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, 58 ஆண்டுகால வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னதாக 1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முந்தைய சாதனையாக 1971 ஆம் ஆண்டு திபு கோஷ் மற்றும் ராமன் கோஷ் ஜோடி ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்துவந்தது, இதனை தற்போது சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று முறியடித்துள்ளது.