மன் கி பாத்தின் 100வது நிகழ்வு; யுனெஸ்கோ இயக்குனர் ஜெனரல் அனுப்பிய செய்தி.!
பிரதமரின் மன் கி பாத் 100 வது நிகழ்வின் சிறப்பு புத்தகத்திற்கான, சிறப்பு செய்தியை யுனெஸ்கோவின் இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அஸூலே வழங்கியுள்ளார்.
யுனெஸ்கோவின் இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அஸூலே, பிரதமரின் மன் கி பாத் 100வது நிகழ்வின் சிறப்பு புத்தகத்திற்கு சிறப்பு செய்தியை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 50க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் ஓலிபரப்படும் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியானது, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் விரும்பி கேட்கும் மற்றும் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.
மக்களை ஒன்றிணைக்க வானொலியின் மிகப்பெரிய சக்தி என்று “மன் கி பாத்தின்” 100வது நிகழ்வின் சிறப்புப் புத்தகத்திற்கான தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலக வானொலி பாரம்பரிய நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தவும், வானொலி மற்றும் அதன் மதிப்புகளை கொண்டாட உலக மக்கள் அனைவரையும் அழைக்கவும் இந்த புத்தகம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இதனால் யுனெஸ்கோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று, உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து வானொலி, நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
பாரம்பரிய AM மற்றும் FM அதிர்வெண்கள் முதல் இப்போது டிஜிட்டல் ரேடியோ, வெப் ரேடியோ மற்றும் பாட்காஸ்ட்களின் வளர்ந்து வரும் மண்டலமாக வானொலி விரிவடைகிறது என்று அவர் மேலும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.