கர்நாடக சட்டசபை தேர்தல்: நாளை பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ஜேபி நட்டா.!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை வெளியிடுகிறார்.
இந்த தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கான நலன்களில், உள்கட்டமைப்பு மேம்பாடுகளில், மற்றும் பெண்கள்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. முதல்முறை வாக்காளர்களை கவரும் வகையில், அவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.