திண்டுக்கல்லில் பெண்களிடம் நகைகளை பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி நூதன திருட்டு!
வீட்டில் தனியே இருந்த பெண்களிடம் திண்டுக்கல்லில் நகைகளை பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி, மயக்க மருந்து தடவி 9 சவரன் நகைகளை வடமாநில இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
பாறைப்பட்டி எம்.கே.எஸ்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கமீலா பர்வீன், ஆம்னி பீவி ஆகியோரை வடமாநில இளைஞர்கள் 2 பேர் அணுகியுள்ளனர். தங்கநகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி, பெண்கள் அணிந்திருந்த தங்கவளையல்களில் பொடி ஒன்றை தேய்த்து, பெண்களின் கைகளிலும் பூசியுள்ளனர்.
அதில் இருவரும் வசியம் செய்ததுபோல ஆனதாக சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், பெண்கள் அணிந்திருந்த 9 சவரன் தங்கச்சங்கிலி, மோதிரம், வளையலை கழற்றித் தரச் சொல்லி, அங்கிருந்து மாயமாகினர். நினைவு திரும்பிய பிறகு நகைகள் திருடு போனதை அறிந்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் நகர தெற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.