இன்று மான் கி பாத்தின் 100வது நிகழ்ச்சி.! வெளியாகிறது ரூ.100 நாணயம்…
பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியானது இன்று 100வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று மான் கி பாத் நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் மோடி.
இந்த அத்தியாயம் 100வதை எட்டியதை விமர்சையாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐநா சபையின் தலைமையகத்திலும் இந்நிகழ்வு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்வுக்காக ரூ.100 நாணயமும் வெளியிடப்பட உள்ளது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் நடைபெற இருக்கும் இந்த மான் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் மோடி தொகுத்து வழங்கும் ‘மன் கி பாத்’ வானொலியில் நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். இது முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.