கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல்!
கடுமையான பின்னடவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில், கடந்த ஒரு ஆண்டில், எதிர்கொண்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட, அத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18 ஆம் நிதியாண்டில், 50 ஆயிரம் குறைந்து, 2 லட்சத்து 17 ஆயிரமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 ஆயிரத்து 221 கோடி ரூபாயாக இருந்த தொழில் முதலீடு, 25 ஆயிரத்து 373 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், 5 லட்சம் பேர் வரையில், வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டி 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13 லட்சத்து 78 ஆயிரத்து 544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.