ஹெலிகாப்டர்கள் விபத்து..! விமான சேவையை நிறுத்த அமெரிக்க ராணுவம் உத்தரவு..!

HH-60 Pave Hawk helicopters

முக்கிய பணிகளில் ஈடுபடாத அனைத்து விமானிகளையும் தரையிறக்க அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜேம்ஸ் மெக்கன்வில்லே, முக்கியமான பணிகளில் ஈடுபடாத அனைத்து விமானிகளையும் தரையிறக்க உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் இரண்டு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் விமானிகளின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை, மேலும் விபத்துகளைத் தடுக்கவும் எங்கள் பணியாளர்களைப் பாதுகாக்கவும் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான படியாகும் என்று மெக்கன்வில்லே தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் எங்கள் விமானிகள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பாதுகாப்பாக முடிக்க அறிவு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த பாதுகாப்பு மற்றும் பயிற்சி நெறிமுறைகளில் கவனம் செலுத்துவோம் என்று மெக்கன்வில்லே கூறியுள்ளார்.

முன்னதாக, அலாஸ்காவின் ஃபோர்ட் வைன்ரைட் அருகே பயிற்சிப் பணியில் இருந்து திரும்பிய இரண்டு ஏஎச்-64 அப்பாச்சி (AH-64 Apache) ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த மாதம் கென்டக்கியில் உள்ள ஃபோர்ட் கேம்ப்பெல் அருகே பயிற்சியின் போது இரண்டு எச்எச்-60 பிளாக்ஹாக்ஸ்  (HH-60 Blackhawks) ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்