மெர்சல் படத்தை மிஞ்சிய காலா ..!
நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கோலிவுட்டில் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
வர்த்தக ஆய்வாளர்களின் ஆரம்ப மதிப்பீட்டில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் காலா 50 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி, ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி, கேரளாவில் ரூ. 3 கோடி, மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியாகும். இந்த மதிப்பிடப்பட்ட வசூல் மற்றும் இறுதி வசூல் மாறுபடும், என ஐபிடைம்ஸ்( ibtimes ) கூறி உள்ளது.
பல்வேறு தடைகளை தாண்டி விஜய், அஜித் என அனைவரது வசூல் சாதனைகளையும் காலா முறியடித்துள்ளது என்றே கூறவேண்டும்.