பயங்கர விபத்து…நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…2 பேர் பலி.!!

மதுரை அருகே தனியார் பேருந்து அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மதுரை, நாகமலை புதுக்கோட்டை அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் ஒரு பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பேருந்து விபத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
தனியார் பேருந்து அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.