மாணவர்களே ரெடியா.? இப்பவே குறிச்சு வெச்சுக்கோங்க..’தேர்வு’ தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதி யை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இன்றுடன் 1-9ம் வகுப்புகளுக்கு அனைத்து தேர்வுகள் முடிவடைந்துள்ளதாள் நாளை 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்து விடுமுறையில் உள்ளது.
இதனையடுத்து, 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்ததோடு அடுத்த ஆண்டு (2023) பொதுதேர்வுகள் தொடங்கும் தேதியையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025