#BREAKING: மீனவர் கொலை.. 10 பேர் குற்றவாளிகள் – கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.
கடலூர் மாவட்டம் சோனங்குப்பத்தை சேர்ந்த மீனவர் பஞ்சநாதன் (அதிமுக பிரமுகர்) கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூரில் கடந்த 2018ம் ஆண்டு தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மீனவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக வழக்கை விசாரித்து வந்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரம் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.