#BREAKING : ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்.!

கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளை முதல் மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது, கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ம் வகுப்பு இறுதித்தேர்வை ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முன்பு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்றுடன் 1-9ம் வகுப்புகளுக்கு அனைத்து தேர்வுகள் முடிவடைந்து நாளை 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்து விடுமுறையில் உள்ளது.

இந்நிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். குறிப்பாக, கோடை விடுமுறை என்பதால், சிறுவர்கள் யாரும் நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.