கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.! பாடலாசிரியர் வைரமுத்து கண்டனம்.!

Vairamuthu

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி ஆதிமொழிக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டார்கள். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது. திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். – வைரமுத்து விமர்சனம். 

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சார செய்து நாளுக்கு நாள் வருவது போல பல்வேறு கருத்து மோதல், சர்ச்சை என வழக்கமான தேர்தல் பிரச்சார களோபரங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் தான் நேற்று நமது தமிழ்த்தாய் வாழ்த்து கர்நாடகாவில் பாதியில் நிறுத்தப்பட்டு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவமோகா பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். நேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து, பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். து தமிழர்கள் அதிகம் கலந்து கொண்ட பிரச்சார மேடை என்பதால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. உடனே, பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா அதனை நிறுத்தி கர்நாடக மொழி வாழ்த்தை ஒலிபரப்ப கோரினர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இதுகுறித்து திரைப்பட பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து தனது எதிர்ப்பை டிவிட்டரில் பதியைவிட்டுள்ளார். அதில், கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்.

அதனை விடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி ஆதிமொழிக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டார்கள். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது. திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். என தனது கண்டனத்தை வைரமுத்து பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்