ஜெய்ப்பூர் எனக்கு மிகவும் நெருக்கமான இடம்.. தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் தோனி விளக்கம்!

பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் இல்லை என ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து தோனி விளக்கம்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 37 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
ராஜஸ்தான் வெற்றி:
பின்னர் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வேற்று பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் சென்றது.
தோனி விளக்கம்:
இப்போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஆடுகளமும் ராஜஸ்தான் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்ததால், அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது.
நல்ல தொடக்கம் இல்லை:
பவுலர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினார்கள், அதிக ரன்கள் இலக்கு என்பதால் பவர் பிளேயில் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் சென்னை பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் அமையவில்லை என விளக்கமளித்தார். இதன்பின் பேசிய தோனிம், இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.
தோனி நெகிழ்ச்சி:
ஜெய்ப்பூர் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம், என் முதல் ஒருநாள் சதம் வைசாக் மைதானத்தில் நிகழ்ந்தது. அது எனக்கு மேலும் 10 ஆட்டங்கள் ஏற்படுத்தி கொடுத்தது, ஆனால் நான் ஜெய்ப்பூரில் அடித்த 183 ரன்கள் எனக்கு மேலும் ஒரு வருட வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.