தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை.!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளை முதல் மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ம் வகுப்பு இறுதித்தேர்வை ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, 1-3ம் வகுப்புகளுக்கு ஏப்.17 – 21 வரையும், 4,5ம் வகுப்புக்கு ஏப்.10 -28 வரையும், 6-9ம் வகுப்புக்கு ஏப்.10 -28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றுடன் அனைத்து தேர்வுகள் முடிவடைந்து நாளை 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஏற்கனவே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்து விடுமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025