வெளியாகாத காட்சிகளுடன் இன்று OTT-யில் வெளியாகும் விடுதலை .!
இயக்குனர் வெற்றிமாறன் தனது சமீபத்திய படமான விடுதலை பாகம் 1 மூலம் மற்றொரு சூப்பர்ஹிட்டைப் பெற்றார். இது ஒரு பீரியட் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும், இந்த படத்தில், நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி சில நாட்களுக்கு கழித்து, இன்று OTT-ல் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னரான ZEE5 தமிழில் இன்று முதல் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், சிறப்பு அம்சம் என்னவென்றால், OTT பார்வையாளர்களுக்கு திரையரங்கில் நீக்கப்பட்ட கட்சிகளுடன் வெளியாக இருக்கிறது. மேலும், விரைவில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை அருமையாக இருந்ததால் படம் மக்களுக்கு பிடித்து போக படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் கண்டு கழித்தனர். அந்த வகையில், படத்தில் நடித்த நடிகர்களும் அருமையாக நடித்திருந்தார்கள் என்றே கூறலாம். அதன்படி, விடுதலை படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை:
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விடுதலை’ படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை அளித்ததால், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.