இன்றைய (28.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

petrol price

342-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

ஆனால், தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக  சரிந்திருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 105.00 அல்லது 1.68% எனக் குறைந்து ரூ.6,130 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

ஓராண்டை நெருங்கியபோதிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 342-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today
lucky baskhar
bengal cyclone
FisherManRescue
Delhi Prashant Vihar PVR blast
Champions Trophy 2025 - PCB Head
AAP Leader Arvind Kejriwal