சூடானில் இருந்து 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்..! வி.முரளீதரன் ட்வீட்..!
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 128 இந்தியர்கள் ஜெட்டாவுக்கு வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு மத்தியில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்று பெயரிட்டுள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் சூடானில் சிக்கி தவித்த சுமார் 500 இந்தியர்கள் அந்நாட்டு துறைமுகத்தை ஏற்கனவே வந்தடைந்த நிலையில், தற்போது முதற் கட்டமாக 278 இந்தியர்கள் கப்பல் மூலம் ஜெட்டா வந்தடைந்தனர்.
இந்நிலையில், சூடானில் இருந்து மீட்கப்பட்ட 128 இந்தியர்களைக் கொண்ட மற்றொரு தொகுதி ஜெட்டாவுக்கு வந்துள்ளது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். அவர், ஆபரேஷன் காவேரியின் மற்றொரு IAF C-130J விமானம் 128 இந்தியர்களுடன் ஜித்தாவிற்கு வந்தது. இது சூடானில் இருந்து வரும் நான்காவது விமானம் ஆகும்.
ஜெட்டாவிற்கு வந்துள்ள அனைத்து இந்தியர்களும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. என்று பதிவிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து தங்கள் குடிமக்களை மீட்பதற்காக விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பி வருகின்றன. ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து இதுவரை 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
Another IAF C-130J flight under #OperationKaveri arrived at Jeddah with 128 Indians, the fourth aircraft from Sudan.
Efforts are on to ensure that all Indians, who arrived in Jeddah will be sent to India at the earliest. pic.twitter.com/KGoaNRb7mv
— V. Muraleedharan (@MOS_MEA) April 26, 2023