ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்ற அப்பாவை எதிர்த்த மகள்..!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’ என வலியுறுத்தினர். நான் என்ன பேச வேண்டுமோ, அதை, நாக்பூரில் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்தநிலையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டட்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பது குறித்து பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பிரணாப் முகர்ஜி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பது பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தவறான தகவல்களை பரப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
பிரணாப் முகர்ஜியின் பேச்சு மறுந்து போகும் என்றும், அவர் பங்கேற்கும் காட்சிகளும் அது குறித்து பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் வெளியிடும் பொய்யான செய்திகள் காலத்திற்கும் நீடித்து இருக்கும் என சர்மிஸ்தா குறிப்பிட்டுள்ளார்.