போலி ஆவணங்கள் – ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

o.panneerselvam

கர்நாடகாவில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்யப்பட்ட குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக இபிஎஸ் தரப்பு புகார் அளித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு குமார் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். ஓபிஎஸ் வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

அதில், அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் இபிஎஸ் தரப்பினர் புகாரின் பேரில் பெங்களூரு காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்