உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்கு சென்றார்..!
பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளார். ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து, ஜம்மு – காஷ்மீரில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் ஜூன் 28 ஆம் தேதி அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஜூன் 15 ஆம் தேதிக்கு நீட்டிப்பது குறித்து, முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதலமைச்சர் மெஹ்பூபா இல்லத்தில் நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.