RCB vs KKR: பெங்களூரு அணி டாஸ் வெற்றி; முதலில் பவுலிங் தேர்வு.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல்-இன் இரண்டாவது பாதி இன்று தொடங்குகிறது. இதுவரை 75 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆர்.சி.பி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கே.கே.ஆர் அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் இருக்கின்றன.

பெங்களுரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுவதால், அதிரடி மற்றும் சிக்ஸர்களுக்கு குறைவிருக்காது என்றே சொல்லலாம். இரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ரன் மழை பொழியலாம், மேலும் பெங்களூரு அணியில் விராட், டுபிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் தற்பொழுது நல்ல பார்மில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அவர்களது அதிரடியை இன்றும் எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஜேசன் ராய் மற்றும் ரசல் என மிகப்பெரிய பேட்டிங் வரிசை இருப்பதால் இன்று அதிரடிக்கு பஞ்சமிருக்காது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு அணி: விராட் கோலி(C), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(W), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்சல் படேல், முகமது சிராஜ்

கொல்கத்தா அணி: ஜெகதீசன்(W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்