நக்சல் தாக்குதலில் 11 வீரர்கள் வீர மரணம் – பிரதமர் மோடி கண்டனம்!

Default Image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல் தாக்குதலில் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சோதனை நடத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய போது, நக்சல்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து டி.ஆர்.ஜி. ரிசர்வ் படையை சேர்த்த 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து, வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்