பரபரப்பு…சாலை தடுப்பு சுவரில் மோதி மாநகர பேருந்து ‘விபத்து’… 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!
சென்னை ஐசிஎஃப்பில் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி மாநகர பேருந்து விபத்துக்குள்ளானது.
சென்னை ஐசிஎஃப்பில் சாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து அதிவேகமாக சென்ற காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க திடீரென பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பயணிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கலைத்து க்ரீன் வரவழைத்து பேருந்தை காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றார்கள். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.