ஐயோ..! விடுமுறை இல்லாமல் வரும் ‘மே’ மாதம்…கடும் சோகத்தில் பணியாளர்கள்…!!
இந்த மாதம் (ஏப்ரல்) அரசு அலுவலகங்கள், மற்றும் பள்ளி கல்லூரிகள். வங்கிகள் என அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. குறிப்பாக வங்கிகளுக்கு பெரும்பாலும் நிறைய நாட்களில் விடுமுறை கிடைத்தது. பள்ளி கல்லூரிகள் வங்கிகள் உட்பட 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 7-ஆம் தேதி புனித வெள்ளி, 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு. 22-ஆம் தேதி ரம்ஜான் ஆகிய 4 நாட்களிளை சேர்த்து விடுமுறை கிடைத்தது.
இந்த விடுமுறை தினங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை வந்ததால் மக்கள் வார இறுதியோடு சேர்த்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் , வரும் மாதமான ‘மே’ மாதம் ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை உள்ளது. அதை தவிர அடுத்த மாதம் ஒரு விடுமுறை கூட இல்லை.
அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அதனை முன்னிட்டு அந்த 1 நாள் மட்டும் தான் எல்லாருக்கும் விடுமுறை. அந்த தேதி தவிர மே மாதத்தில் ஒரு பொது விடுமுறை கூட கிடையாது. இதனால், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வரும் மே மாதம் முழுவதுமே விடுமுறை என்பதால் மாணவர்கள் மட்டும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.