Today’s Live: சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை..!
சூடான் இராணுவ மோதல்:
த்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையிலான மோதல்களால், உயிரிழப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பொது இடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. தற்பொழுது, மோதலால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 360 இந்தியர்கள் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து புது தில்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டனர்.
#WATCH | 360 Indian nationals leave from Jeddah Airport on a flight bound for New Delhi. They have been evacuated from the conflict-torn Sudan. #OperationKaveri
(Video: MoS MEA V. Muraleedharan) pic.twitter.com/qzp2E0VHQY
— ANI (@ANI) April 26, 2023
26.04.2023 5:15 PM
கட்டுப்பாடு அறை:
சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறைக்கு 011-24193100, 9289516711, [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்படும்.
26.04.2023 5:00 PM
அமைச்சர் மரணம்:
உத்தரகாண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் சந்தன் ராம் தாஸ் மாரடைப்பால் இன்று காலமானார். அவர், நெஞ்சுவலி காரணமாக பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மரணம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தன் ராம், பாகேஷ்வர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தார். இவரது மறைவுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
26.04.2023 4:30 PM
நக்சலைட் தாக்குதல்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
26.04.2023 3:45 PM
மு.க.ஸ்டாலின் கடிதம் :
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்கு தமிழக அரசு ஒத்துழைக்க தயார் என முக.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் உள்பட இந்தியர்களை அழைத்துவரும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாரென குறிப்பிட்டுள்ளார்.
26.04.2023 2:25 PM
தோசை சுட்ட பிரியங்கா :
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் சாமானியர்களை கவர அரசியல் தலைவர்கள் புதுமையாக யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மைசூரு ஹோட்டலில், தோசை சுட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன்பிறகு, பிரியங்கா ஹோட்டல் ஊழியர்களுடன் உரையாடினார்.
26.04.2023 2:10 PM
மதுபானம் :
சர்வதேச நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம் என்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அரசாணையை செயல்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
26.04.2023 1:30 PM
ஆன்லைன் சூதாட்ட தடுப்பு:
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடுப்பு, ஒழுங்குமுறை சட்டத்திற்கு தடை கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இச்சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், அவரச வழக்காக விசாரிக்கக்கோரியும் முறையீடு செய்துள்ளது. மேலும், இந்த மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடுவதாக நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு தெரிவித்துள்ளது.
26.04.2023 12:40 PM
கலாஷேத்ரா விவகாரம்:
கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கொள்கை விசாரணை குழுவில் பெற்றோர், மாணவியர்களை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. சென்னை கலாஷேத்ராவில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் நீதிமன்றம் இதை தெரிவித்து, வழக்கை ஜூன் 15க்கு ஒத்தி வைத்தது.
26.04.2023 11:35 PM
தேர்வு முடிவுகள்:
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
26.04.2023 10:55 AM
அண்ணாமலை மீது காங்கிரஸ் புகார்:
கர்நாடகாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது.
26.04.2023 10:30 AM