ஜி ஸ்கொயர் விவகாரம்.! 3வது நாள் வருமான வரித்துறை சோதனை.!
ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
ஜி ஸ்கொயர்:
பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும், அதற்கு முன் தினமும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் ‘ரெய்டு’ நடத்தி வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
செட்டிநாடு குழுமம்:
இதற்கிடையில், வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதன் ஆவணம் மற்றும் பல்வேறு வங்கிகளில் வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில், செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறை மூன்றாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.