பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 60,172 புள்ளிகளாக வர்த்தகம்..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 41.68 புள்ளிகள் அதிகரித்து 60,172 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,773 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 60,087 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 41.68 புள்ளிகள் அல்லது 0.069% என உயர்ந்து 60,172 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 3.75 புள்ளிகள் உயர்ந்து 0.021 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,130 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,769 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.