சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூரில் கஞ்சா கடத்த வழக்கில் தமிழரான தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் சிறையில் இருந்த தமிழரான சுப்பையா தூக்கிலிடப்பட்டார். ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்காக கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து தூக்குத்தண்டனையை நிறைவேற்றியது சிங்கப்பூர் அரசு.
46 வயதான தங்கராஜூ சுப்பையா, 1,017.9 கிராம் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டிக்கப்பட்டார். இதனிடையே, தூக்கு தண்டனையை “அவசரமாக மறுபரிசீலனை செய்ய” சிங்கப்பூருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்த போதிலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.