கர்நாடக தேர்தலில் அண்ணாமலைக்கு தடை.? காங்கிரஸ் பரபரப்பு புகார்.!

Default Image

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய கூடாது என காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை , வாபஸ் எல்லாம் நிறைவு பெற்று 2,613 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Karnataka Cogress Compalaint
[Image source : Twitter]
இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் பாஜக பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

Annamalai BJP
[Image soure : Google]
இந்நிலையில், கர்நாடக தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுப்பட கூடாது எனவும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ள்ளது.  அண்ணாமலை காவல்துறையில் ஐபிஎஸ் பணியில் கர்நாடகாவில் தான் இருந்துள்ளார் என்பதால் அவருக்கு இங்குள்ள காவல்துறையினரின் பெரும்பாலானோரை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அதனை அண்ணாமலை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என காங்கிரஸ் தரப்பில் இருந்து அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்