பரபரப்பு…மாணவி இறப்புக்கு எதிர்ப்பு..காவல் நிலையத்தில் ‘தீ’ வைத்த பொதுமக்கள்.!

Default Image

மேற்கு வங்கத்தில் கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். 

ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.  10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி மாலையில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.  மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்த போதிலும், குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் போலீசில் புகார் அளித்தனர்.  இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் அவரது உடலை கால்வாயில் கண்டெடுத்தனர். மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை எரித்தும், பல கடைகளுக்கு தீ வைத்தனர்.  இதனையடுத்து, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து இன்று கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீ  வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கற்களை வீசி, போலீஸ் தடுப்புகளை உடைத்து, போலீஸ் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பான புகைப்படங்களும். வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்