விதிகள் மீறல்..’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு..அதிர்ச்சியில் படக்குழு.!!

Default Image

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இயக்குனர் அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் .

CaptainMiller
CaptainMiller

 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்புக்காக அந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டுகளை வெடிக்க செய்து படப்பிடிப்பு நடத்துவதாகவும் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்துவதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து, தற்போது வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளதாக தென்காட்சி மாவட்ட ஆட்சியர் துரை தெரிவித்துள்ளார். படக்குழுவிடம் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது..? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், படப்பிடிப்பு பகுதியில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, களக்காடு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளதாக, தென்காட்சி மாவட்டத்தின் ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்