மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த மார்ச் 9ம் தேதி பிஹார் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்கள் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.