எங்களுக்கு ஒரு முஸ்லிம் ஓட்டு கூட வேண்டாம் – கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு
எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு.
கர்நாடகாவில், சிவமொக்காவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சையான முறையில் பேசியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு
இந்த பகுதியில், சுமார் 60,000 முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு வாக்குகள் எங்களுக்கு வேண்டாம். தேசியவாத முஸ்லிம்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும், பாஜக ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொரு சமூகமும் பலனடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சியில், இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். எவரும் இந்துக்களை தாக்கத் துணியவில்லை. பாஜக அல்லாத எந்த அரசும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா இந்த கருத்து தெரிவித்த போது கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா உடனிருந்தார். வரும் மே-10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.