களைகட்டும் கர்நாடக தேர்தல்…தீவிர பிரச்சாரத்தில் அமித்ஷா.!!

Default Image

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பலத்த போட்டி நிலவுகிறது.

பிரச்சாரம் தீவிரம்

இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மற்றும் நாளை கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அதைப்போல நாளை கர்நாடக தெற்கு பகுதியில் பெலகாவி மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் இருந்து, பாஜக கட்சியின் சார்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும்,    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கர்நாடக பிரச்சாரத்தில் பேச்சாளர்களாக களமிறக்க உள்ளனர்.

களத்தில் அமித்ஷா 

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போது உள் அமைச்சர் அமித்ஷா  பாகல்கோட்டில் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின்போது பேசிய அமித்ஷா ” இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு எம்எல்ஏவைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்காலத்தை பிரதமர் மோடியின் கைகளில் ஒப்படைப்பதற்காகவும் தான். கர்நாடகாவை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதுடன், நல்ல அரசியலையும் கொண்டு வருவதற்கான தேர்தல் இது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் ஏற்படும்.  குடும்ப அரசியல், கலவரங்கள் நடக்கும்.  ஜனதா தளம் கட்சிக்கு நீங்கள் வாக்களிப்பது என்பது உங்கள் வாக்கை காங்கிரசுக்கு அளிப்பதாகும். கர்நாடகாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என கூறியுள்ளார். மேலும், வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகவிற்கு வருகை தரும் நிலையில், அவருடைய தலைமையில்  மெகா தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்