தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலருக்கு அரிவாள் வெட்டு.! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரை 2 நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெட்டுப்பட்ட பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தாக்கது. அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதம் உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.