அடடா செம க்யூட்…நடிகை சமந்தாவா இது..? வைரலாகும் பருவ புகைப்படம்.!!
நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் புகைப்படங்கள் வெளியீட்டாலே அந்த புகைப்படங்கள் ட்ரென்டிங் ஆகிவிடும்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சமந்தா தனது பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் சமந்தா மிகவும் அமைதியாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “தலைவி சமந்தா சிறிய வயதிலே அழகாக இருக்காங்களே ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தா சாகுந்தலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குஷி படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.