இந்தியா முழுவதும் 70 தனியார் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!மத்திய அரசு அதிரடி
மத்திய அரசு நாடு முழுவதும் 70 தனியார் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்துள்ளது.
இதனால் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைகளின்படி இத்தடை உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதன் அடிப்படையில், 82 மருத்துவக் கல்லூரிகளில் 2018-19ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல் புதிய மருத்துவக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கப்பட்ட 37 தனியார் மற்றும் 31 அரசு கல்லூரிகள் என 68 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கறாரான விதிகளைப் பின்பற்றி வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.