ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி.!
5 கொரியப் பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த, இந்திய வம்சாவளி சேர்ந்த நபரால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு.
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து கொரியப் பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் அதனை தனது ரகசிய கேமராவில் படம்பிடித்ததாலல் கைது செய்துப்பட்டுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அரசியல் உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் முக்கிய உறுப்பினரான பாலேஷ் தன்கர் என்பவர், கொரியப் பெண்களை குறிவைத்து, வேலைவாய்ப்பு கொடுப்பதாக விளம்பரங்கள் செய்து தனது வலையில் 5 பெண்களை சிக்க வைத்துள்ளார். பின்னர், அவர்களிடம் நெருக்கமாகி, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறபடுகிறது.
அது மட்டும் இல்லாமல், படுக்கை அறையில் கடிகாரத்தில் கேமராவை மறைத்து வைத்து, உடல் உறவு கொண்டதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தன்கர், 6 வது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும்போது, அந்த பெண் சுதாரித்ததால் அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தன்கரை கைது செய்து விசாரிக்கையில், இந்த பாலியல் சீண்டல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், பல வீடியோக்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஈடுபட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.