#BREAKING: பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Default Image

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு. 

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

திட்டமிட்டபடி, மே 5-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம், இதனால், நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கு பின்பு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.  மேலும், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்