பெங்களூருவின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம்!
நடப்பு சீசனின் 2வது முறையாக, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
கடந்த 26ம் தேதி நடைபெற்ற 32 லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டூ பிளசிஸ் காயம் காரணமாக இம்பாக்ட் வீரராக மட்டுமே களமிறங்கிய நிலையில், விராட் கோலி பெங்களூரு அணி கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக, அப்போட்டியில் பெங்களூருவின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனின் 2வது முறையாக, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும், ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25% ( எது குறைவோ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்திருந்தது ஐபிஎல் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.